2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

பிரித்தானியாவின் வயது குறைந்த தாய்

Ilango Bharathy   / 2021 ஜூன் 28 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவில் பதினொரு வயது சிறுமியொருவர் வயது குறைந்த தாய் என்னும் இடத்தைப் பெற்றுள்ளார். 10 வயதில் கர்ப்பிணியான இச் சிறுமி இம்மாத முற்பகுதியில் குழந்தையொன்றைப் பிரசவித்துள்ளார்.

இது ஓர் அதிர்ச்சிகரமான நிகழ்வு என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. குழந்தையும் தாயும் தற்பொழுது நலமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

"நான் கண்ட மிக இளமையான தாய் இவர்தான் " என்று கூறிய மருத்துவர் டொக்டர் கரோல் கூப்பர் மேலும் தெரிவிக்கையில் பெண்கள் சராசரியாக பருவமடைய ஆரம்பிக்கும் காலப்பகுதி பதினொரு வயதிலிருந்தாகும். இது எட்டு  முதல் பதினான்கு வயது காலப்பகுதியில் இடம்றெலாம்.

பல ஹோர்மோன்களில் எடை ஒரு தாக்கமாக இருக்கிறது. அதனால் சாதாரண எடையை விட அதிக எடையுடன் இருப்பதால் பருவமடைதல் முன்னரே இடம்பெறுகிறது என்று கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .