2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

பூமியைச்சுற்றி 44 நாட்கள்; உலகின் இளம் விமானி சாதனை

Ilango Bharathy   / 2021 ஜூலை 13 , பி.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் இளவயது விமானி என்னும் சாதனையை இங்கிலாந்தைச்சேர்ந்த  ‘ட்ராவிஸ் லட்லோ‘ (Travis Ludlow) என்னும்  இளைஞர் படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் அமெரிக்காவின் லூசியானாவைச் சேர்ந்த 18 வயது 163 நாட்களுமான மேசன் அன்ட்ரூஸ் என்பவரின் சாதனையே உலக சாதனையாகக் கூறப்பட்டது.

அவரது சாதனையை 18 வயதும் 149 நாட்களுமேயான ட்ராவிஸ் லட்லோ தனி விமானம் மூலம் 44 நாட்களில் 25, 000 மைல்களைக் கடந்து அண்மையில் முறியடித்துள்ளார்.

நெதர்லாந்தில் ஆரம்பித்து அங்கேயே முடிக்கப்பட்ட ட்ராவிஸின்  பயணத்தின் போது போலந்து, ரஸ்யா, அமெரிக்கா, கனடா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்பெயின், மொரோக்கோ, பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய 13 நாடுகளில் நிறுத்தவேண்டி ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .