2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

கொரோனாவுக்கு பலியான அமெரிக்க எம்.பி

J.A. George   / 2020 டிசெம்பர் 31 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அண்மையில் நடந்த தேர்தலில், லூசியானா மாகாணத்தில் இருந்து குடியரசு சார்பில் பிரதிநிதிகள் சபைக்கு தேர்வானவர் லூக் லெட்லோ. 

இவர் வருகிற ஞாயிற்றுக்கிழமை எம்.பி.யாக பதவியேற்க இருந்தார். இந்த நிலையில் கடந்த 18ஆம் திகதி லூக் லெட்லோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. 

இதனை தொடர்ந்து, உடனடியாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே கடந்த 23ஆம் திகதி அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை லூக் லெட்லோ, உயிரிழந்ததார். அவரது மறைவுக்கு, லூசியானா மாகாண கவர்னர் ஜான் பெல் எட்வர்ட்ஸ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X