2021 ஒக்டோபர் 17, ஞாயிற்றுக்கிழமை

சகோதரிக்காக உயிரைப் பணயம் வைத்த பெண்

Ilango Bharathy   / 2021 ஜூன் 09 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதலையுடன் போராடி இளம் யுவதியொருவர், தனது சகோதரியைக் காற்பாற்றியுள்ள  சம்பவமொன்று அண்மையில் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

இரட்டைச் சகோதரிகளில் ஒருவரான ஜோர்ஜியா என்பவரே இவ்வாறு தனது சகோதரி மெலிஸா லோரியைக் காப்பாற்றியுள்ளார்.

சம்பவத் தினத்தன்று சகோதரிகள் இருவரும் இரவு நேரத்தில் நீச்சல் தடாகமொன்றில் நீந்திக் கொண்டிருந்தபோது மெலிஸா லோரியைமுதலையொன்று  இழுத்துச் சென்றுள்ளது.

இந்நிலையில்  நீண்ட நேரமாகியும் சகோதரியைக் காணாததால் ஜோர்ஜியா நீரில் மூழ்கி அவரைத் தேடியுள்ளார். இதன் போது முதலையொன்று அவரை கவ்விகொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

எனினும் துணிச்சலுடன் செயற்பட்ட ஜோர்ஜியா முதலை, தனது சகோதரியை விடுவிக்கும் வரை தனது கைகளால் தாக்கியுள்ளார். ஒரு கட்டத்தில் அவரது தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல்   முதலையும்  அவரது சகோதரியை விட்டுச் சென்றுள்ளது.

இந்நிலையில் இது குறித்து அவர்களின் தாயார் கருத்து தெரிவிக்கையில் ”முதலையின் தாக்கத்துக்குள்ளான தன் இரண்டு மகள்களும்  உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும்  மெலிஸா தற்போது கோமா நிலைக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .