2021 ஒக்டோபர் 17, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸாரிடமே தனது கைவரிசையைக் காட்டிய மதுப்பிரியர்

Editorial   / 2021 ஏப்ரல் 28 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகம்: திருப்பூர் தெற்கு போக்குவரத்து பொலிஸ் நிலையத்துக்கு நிலையான கட்டிடமொன்று இல்லாததால் வீதியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள தற்காலிக செட் ஒன்றில் குறித்த பொலிஸ்நிலையம் இயங்கி வருகின்றது.

இந் நிலையில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  பொலிஸாரின் காரை மதுபோதையில் தள்ளாடியபடி வந்த நபரொருவர் திருடிச்சென்று விபத்தை ஏற்படுத்திய சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

இந் நிலையில் விசாரணையின் போது குறித்த வாகனத்தைத் திருடிச்சென்றவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த நபர் எனத் தெரிய வந்தது.

மேலும் குடி போதையில் தன்நிலை மறந்து இவ்வாறு செய்து விட்டதாகவும் தற்போது அவர்  அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .