2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த நபர்

Ilango Bharathy   / 2023 ஜனவரி 09 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமெரிக்காவின் நியூயோர்க் விமான நிலையத்தில் இருந்து இந்தியத் தலைநகர் புது டெல்லி நோக்கி  கடந்த 26 ஆம் திகதி ஏர் இந்தியா விமானமொன்று பயணித்துள்ளது.

இந்நிலையத்தில் சம்பவ தினத்தன்று குறித்த விமானத்தில் பயணித்த நபர் ஒருவர் மது போதையில் சக பயணியான 70 வயது பெண் மீது சிறுநீர் கழித்துள்ளார்.

இந்த விவகாரம் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 இது தொடர்பான விசாரணையில், பெண் மீது சிறுநீர் கழித்த நபர் மும்பையைச் சேர்ந்த  34 வயதான ஷங்கர் மிஸ்ரா எனத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து  அடுத்து ஏர் இந்தியா விமானத்தில் அவர் பயணிக்க 30 நாட்கள் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த விவகாரத்தை ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் மிகவும் அலட்சியத்துடன் கையாண்டதால், விசாரணை நடத்த மத்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டது.

அதேசமயம் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் தலைமறைவாகி இருந்த ஷங்கா மிஸ்ராவை டெல்லி தனிப்படை பொலிஸார் கைது செய்து டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதனையடுத்து சங்கர் மிஸ்ராவை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க  நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னதாக ஷங்கர் மிஸ்ராவை, அவர் பணியாற்றி வந்த "வெல்ஸ் பார்கோ" என்ற பன்னாட்டு நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .