2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

எரிமலைக்கு பயந்தவர்களின் எலும்புகள் 2,000 வருடங்கள் பின்பு மீட்பு

Editorial   / 2020 நவம்பர் 22 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 2,000 வருடங்களுக்கு முன்னர், வெசுவியஸின் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற செல்வந்தர் மற்றும் அவரது ஆண் அடிமை ஒருவரின் எலும்புக்கூடுகள் பிரசித்திப்பெற்ற பழமையான பொம்பெய் நகரில், இத்தாலியின் தொல்பொருள் ஆராச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கி.பி 79இல் எரிமலை வெடிப்பில் அழிந்து போன, பழைய ரோம் நகருக்கு அருகில் மத்திய தரைக் கடலுக்கு முகப்பாக உள்ள வீட்டின் இடிபாடுகளில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராச்சியின் போது, இந்த இருவரின் மண்டை ஒடுகள் மற்றும் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, 2017ஆம் ஆண்டு குறித்த இடத்தில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராச்சியின் போதும் 3 குதிரைகளின் எலும்புகூடுகள் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வெசுவியஸ் எரிமலை வெடிப்பதற்கு முன்னர் வெளிகிளம்பிய சாம்பல் வீழ்ச்சியில் இவர்கள் தப்பியிருந்தாலும் மறுநாள் காலையில் வெடித்த சக்திவாய்ந்த எரிமலையில் இவர்கள் இறந்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும்; தொல்பொருள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இவ்வாறு மீட்கப்பட்ட 2 எலும்புகூடுகளிலும் மழை பெய்து, சாம்பல் அடுக்குகள் படிந்துள்ளதாகவும் இதனால் குறைந்தது இவர்களின் முதுகில் 2 மீட்டர் அடுக்கில் சாம்பல் படிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .