2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

தடுப்பூசி செலுத்திக் கொண்டால் “அந்த இரண்டும் இலவசம்”

Ilango Bharathy   / 2021 ஜூன் 03 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க சுதந்திர தினமானது ஆண்டுதோறும் ஜுலை 4 ஆம் திகதி, அந்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இவ்வருடம் வரவுள்ள சுதந்திர தினத்தை முன்னிட்டு 70 சதவீத மக்களுக்கு குறைந்தபட்சம் முதலாம் கட்ட தடுப்பூசியாவது  செலுத்தப்படவேண்டும் என்ற இலக்கை ஜனாதிபதி ஜோ பைடன் முன்னெடுத்துள்ளார்.அந்தவகையில் தற்போது வரை 63 வீதமானவர்களுக்கு  முதலாம் கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்துவது குறித்து  மக்களை ஊக்குவிக்க  அமெரிக்க மதுபான தயாரிப்பு நிறுவனமான அன்ஹீசர்-புஷ் (Anheuser-Busch) புதிய முறையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி குறிப்பிட்ட நாட்களுக்குள் தடுப்பூசி இலக்கு அடையப்பட்டால் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக பியர் வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதேபோல்  தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் குழந்தைகளைப்  கவனித்துக்கொள்ள 4 முன்னணி குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்களும்   முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .