2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

மணமகனின் உயிரைப்பறித்த `DJ `

Ilango Bharathy   / 2023 மார்ச் 07 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பீகாரில் நடந்த திருமண நிகழ்வு ஒன்றில், அளவுக்கு அதிகமான சத்தத்தோடு பாட்டு இசைக்கப்பட்டதால், மணமேடையிலேயே மயங்கி விழுந்து மணமகன் உயிரிழந்துள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுரேந்திர குமார் என்பவருக்கு கடந்த புதன் கிழமை திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில்  இத்திருமணத்தின்போது DJவினால் தொடர்சியாகப்  பாடல்கள் இசைக்கப்பட்டுள்ளன.

அப்போது, ஆரம்பம் முதலே பாட்டின் சத்தம் அதிகமாக இருப்பதாக மணமகன் சுரேந்திர குமார் தெரிவித்து வந்துள்ளார்.

தொடர்ந்து பாட்டுகளை இசைத்துக்கொண்டிருந்த டிஜேவிடம் சத்தத்தை குறைக்குமாறு தெரிவிக்கப்பட்டது. எனினும் சத்ததை குறைக்காமலேயே இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக மணமக்கள் மாலை மாற்றிக்கொண்ட பிறகு அவர் திடீரென மயங்கி விழுந்திருக்கிறார்.

அதிர்ச்சியடைந்த இரு குடும்பத்தினரும் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கூட்டிச்சென்றனர். ஆனால், மருத்துவர்கள் சுரேந்திர குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர். அதிகபடியான சத்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் மணமேடையில் மயங்கி விழுந்து மாப்பிள்ளை உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X