2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

குறும்பட போட்டியில் யாழ். இளைஞன் இரண்டாமிடம்

Editorial   / 2021 மே 15 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்கள் ஊடக கட்டமைப்பால் நடாத்தப்பட்ட குறும்பட போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனுக்கு  இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.

 "வீட்டு  வேலைகளும் வேலைகளே " என்ற தொனிப்பொருளில் நாடாளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட குறும்பட போட்டியிலேயே சி .சிவராஜ், இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டார் .  இக்குறும்படத்தை இயக்குனர் தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார் .

குறும்படத்தில் தி.தர்மலிங்கம் , த . சந்திரா , த . அபிஷேகன்  ஆகியோர் நடித்துள்ளனர். மதீசன் இசையமைப்பை கவனிக்க, தொழில் நுட்ப கலைஞர் ஆக  சரவணனும் ரவி வர்மனும் பணியாற்றியுள்ளனர் . கதையை எழுதி இயக்கியுள்ளார் சிவராஜ். இவருடைய இயக்கத்தில் உருவாகி உள்ள " புத்தி கெட்ட மனிதர் எல்லாம் "  என்ற முழு நீள திரைப்படம் வெளியீட்டுக்காக காத்திருப்பது குறிப்பிடவேண்டிய விடயம். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .