2023 ஜூன் 09, வெள்ளிக்கிழமை

”வரதட்சணை போதவில்லை” திருமணத்தை நிறுத்திய மணப்பெண் ; கலங்கிய மணமகன்

Ilango Bharathy   / 2023 மார்ச் 13 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தெலுங்கானாவைச் சேர்ந்த மணப்பெண் ஒருவர்,” மணமகன் குடும்பத்தினர் தனக்குப்  போதியளவு  வரதட்சணை அளிக்கவில்லை” எனக் கூறி திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம், மேட்சல் மல்காஜ்கிரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கடந்த 9 ஆம் திகதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.இதன்போது  2 லட்சம் ரூபாயை   மணப்பெண்ணுக்கு, மணமகன் வீட்டார் வரதட்சணையாக வழங்குவதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் திருமணத்தன்று, மணப்பெண் வெகு நேரமாகியும் மணமேடைக்கு வராததால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, ”மணமகனின்  வீட்டார் அளித்த வரதட்சணை தனக்கு போதவில்லை எனக் கூறிய மணமகள், மேலும் இரண்டு லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததால் அவரைத் திருமணம் செய்துகொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மணமகனின் குடும்பத்தினர் இது குறித்து உடனடியாகப் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து பொலிஸார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்துள்ளனர். எனினும் குறித்த திருமணம் நடைபெறவில்லை எனக் கூறப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .