2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

பெண்ணின் உயிரைக் காத்த ‘பர்ஸ்‘

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 28 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தெலுங்கானாவில் பஸ்ஸொன்றில் கைவிடப்பட்ட  பர்ஸால் (பணப்பை) பெண்ணொருவர் காப்பாற்றப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவில் சங்காரெட்டி மாவட்டத்தில், பதன்செரு பகுதியில் பஸ்ஸொன்றில் பயணித்த யுவதியொருவர்,  இறங்கும் போது தவறுதலாக அவரது பர்ஸ்சை விட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில் பஸ்ஸில் அனைவரும் இறங்கிய பின்னர்  அங்கு பர்ஸ் ஒன்று இருப்பதை அவதானித்த பஸ் நடத்துடனர் ரவீந்தர், அதனைத் திறந்து பார்த்த போது அதில் அதன் உரிமையாளரின்  விவரங்களுடன்  500 ரூபாய் பணம் மற்றும் கடிதமொன்றும் இருப்பதைப் பார்த்துள்ளார்.

குறித்த கடிதத்தில் ”தனக்கு திருமணம் செய்ய விருப்பமில்லை என்றும் அதனால் தனது வாழ்வை முடித்து கொள்ள போகிறேன்” என்றும் குறிப்பிடப்பட்டு இருந்துள்ளது.

இதனைக்  கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து உடனடியாக பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்துப் பொலிஸாரின் உதவியுடன் அப் பெண் கண்டறியப்பட்டு, தனது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்நிலையில் சரியான தருணத்தில் செயற்பட்ட நடத்துனருக்கு  பொலிஸார் மற்றும் பொதுமக்கள் தமது  பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X