2021 ஒக்டோபர் 17, ஞாயிற்றுக்கிழமை

பியூட்டி ஆனார் பாட்டி

Editorial   / 2021 ஏப்ரல் 29 , பி.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுவாகவே பெண்கள் நாற்பது வயதைக் கடந்த பின்னர் முதுமையடைந்து விட்டதாக எண்ணி கவலையடைவார்கள்.

ஆனால் ரஜினி சாண்டி என்ற கேரளாவைச் சேர்ந்த வயது முதிர்ந்த ​பெண்ணொருவர் மொடல் அழகியாக இணையத்தைக் கலக்கி வருகின்றார்.

70 வயதான இவர் 25 வருடங்களாக வெளிநாட்டில் வசித்துவந்துள்ளார். தற்போது, தன் சொந்த ஊரான, கேரள மாநிலம், ஆலுவாய் வசித்து வருகின்றார்.

மலையாளத்தில் ஒளிபரப்பப்பட்ட 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின்  மூலம் பிரபலமான இவர்  சில  மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந் நிலையில் தனது இளமையின் ரகசியம் குறித்து கருத்துத்தெரிவித்த அவர் ”காலை, 5 மணிக்கு எழுந்து, உடற்பயிற்சி செய்வதால் இளமையாகத் தோற்றமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் 'முதுமை, முன்னேற தடையாக இருப்பதில்லை...' எனவும் தெரிவித்துள்ளார்.​


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .