2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

கடனை திருப்பி கேட்ட மூதாட்டியின் விரலை துண்டித்த இளைஞன்

Editorial   / 2020 நவம்பர் 19 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொடுத்த கடனை திருப்பி கேட்ட மூதாட்டியின் விரலை இளைஞன் துண்டித்த சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியை சேர்ந்தவர் விசாலாட்சி(வயது 70). அதே ஊர் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் கண்ணன்(32). 

இவரிடம், விசாலாட்சி ரூ.2 ஆயிரம் கடன் கொடுத்து இருந்தார். சம்பவத்தன்று தான் கொடுத்த கடனை திருப்பி தருமாறு கண்ணனிடம், விசாலாட்சி கேட்டார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த கண்ணன், விசாலாட்சியை சரமாரியாக தாக்கி கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் மூதாட்டியின் இடது கை விரல் துண்டானது.

இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து துண்டான விரலையும், மூதாட்டியையும் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்படுகின்றது.

இது குறித்து நன்னிலம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X