2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

‘ராணி’யை பார்க்க ​அலைமோதும் மக்கள்

Freelancer   / 2021 ஜூலை 09 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பங்காளதேஷ் தலைநகர் டாக்காவுக்கு 30 கிலோமீற்றர் தொலைவில், சாரிகிராமிலுள்ள பண்ணையில், ’ராணி’ என பெயரிடப்பட்ட குள்ளமான பசுவின் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அக்கிராமத்திலுள்ள  ஷிகோர், என்பவரின்    பண்ணையில் இப்பசு   உள்ளது.

26 கிலோ கிராம்  எடையுடைய இந்த பசு, 51 சென்றிமீற்றர் நீளமானது.   கின்னஸ் உலக சாதனை படைத்த மிகச்சிறிய பசுவை விட, ராணி 10 சென்றிமீற்றர் குறைவானது எனத் தெரிவித்துள்ள அதன் உரிமையாளர், இந்தப் பசுதான் உலகிலேயே குள்ளமான பசு என்கின்றனர்.

பங்களாதேஷில் கொரோனா தாண்டவமாடிக்கொண்டிருக்கின்றது. எனினும், கொரோனா ஊரடங்குக் கட்டுப்பாடுகளை மீறி இந்தப் பசுவை பார்வையிடுவதற்கு ஆயிரக்கணக்கானோர் அந்தப் பண்ணைக்கு வந்து செல்கின்றனர்.

அவ்வாறு வருகைதருபவர்கள், பசுவுடன் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். எனினும், கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என, பண்ணை உரிமையாளரிடம் சுகாதாரத் துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கேரளாவைச் சேர்ந்த, 61 சென்றிமீற்றர் உயரமுடைய  மாணிக்கம் என்ற பசுவே, உலகின் குள்ளமான பசுவாகும் என 2014ஆம் ஆண்டு  கின்னஸ் உலக சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (M)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .