2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

13,575 கி.மீ பறந்து கின்னஸ் சாதனை

Editorial   / 2023 ஜனவரி 08 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பார்-டெயில் காட்விட் என்ற பறவை அலாஸ்காவிலிருந்து அஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவுக்கு 8,435 (13,575 கிலோ மீற்றர்) மைல் இடைவிடாமல் பறந்து சாதனை படைத்துள்ளது.

வட அமெரிக்க மேற்கு பகுதியில் உள்ள அலாஸ்காவில் பார்-டெயில் காட்விட் என்ற பறவை இனம் இருக்கிறது. இந்த பறவை குளிர் காலத்தில் பனி அதிகம் ஆகும் நேரம் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து பகுதிக்கு இடம் பெயர்வது வழக்கம். மற்ற பறவை இனங்களை போல் இது அடிக்கடி இடையே ஓய்வெடுக்காது. எப்போதாவது தரையிறங்கும் என்றும் கூறப்படுகிறது.

ஒருவேளை தரையிறங்கினாலும், இது தண்ணீரில் தரை இறங்காது. அதற்கு மிக முக்கிய காரணம், அதன் உடல் அமைப்பு தான். இதன் உடலமைப்பு தண்ணீரில் மிதக்க ஏற்றது அல்ல. அதனால் தண்ணீரில் தெரியாமல் விழுந்தால் கூட பறவைக்கு இறப்பு தான். இதனாலேயே இந்த பறவை நீண்ட தூரம் நிற்காமல் பறக்கும்.

கின்னஸ் உலக சாதனைகளின் படி,பார்-டெயில்ட் காட்விட் (லிமோசா லப்போனிகா), அலாஸ்காவிலிருந்து ஆஸ்திரேலிய மாநிலமான டாஸ்மேனியாவிற்கு 13,575 கிலோ மீற்றர் (8,435 மைல்) உணவு அல்லது ஓய்வு எடுக்காமல் பறந்து சாதனையை முறியடித்தது.

கடந்த தூரம் லண்டனுக்கும் நியூயார்க்கிற்கும் இடையிலான இரண்டரை மடங்கு பயணங்களுக்கு சமம் அல்லது கிரகத்தின் முழு சுற்றளவில் அண்ணளவாக மூன்றில் ஒரு பங்கு ஆகும். அதன் கீழ் முதுகில் இணைக்கப்பட்ட 5ஜி செயற்கைக்கோள் தகவலின்படி, இந்த பயணம் ஒக்டோபர் 13, 2022 அன்று தொடங்கியது. 11 நாட்கள் மற்றும் ஒரு மணி நேரம் பறவை தரையிறங்காமல் தொடர்ந்தது என்று பதிவு செய்யும் அமைப்பு கூறியுள்ளது.

இது கடந்த 2020ம் ஆண்டு அதே இனத்தைச் சேர்ந்த மற்றொரு பறவையால் சாதனை செய்யப்பட்டது என்றும், அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளனர். பொதுவாக நியூசிலாந்திற்கு இடம்பெயரும் இந்த காட்விட், 90 டிகிரி திருப்பத்தை ஏற்படுத்தி ஆஸ்திரேலியாவின் கிழக்கு டாஸ்மேனியாவில் உள்ள அன்சன்ஸ் விரிகுடாவின் கரையில் தரையிறங்கியது.

இரவு பகலாக பறவை மேற்கொண்ட இந்த பயணத்தின் விளைவாக அதன் உடல் எடை பாதிக்கும் மேல் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், வழக்கமாக நியூசிலாந்துக்கு புலம்பெயர்ந்து செல்லும் இந்த காட்விட் வகை பறவை, இந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X