Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2023 மே 30, செவ்வாய்க்கிழமை
Ilango Bharathy / 2023 மார்ச் 07 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகாராஷ்டிராவில் உள்ள ‘ஷனி ஷிங்னாபூர்‘ என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கடந்த 300 ஆண்டுகளாகக் கதவுகள் இல்லாமல் வாழ்ந்து வருகின்றமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக இக்கிராமத்தில் உள்ள வீடுகள், அலுவலகங்கள், கோவில்கள், வங்கிகள் உட்பட எந்த கட்டிடங்களுக்கும் கதவுகள் இல்லை எனக் கூறப்படுகின்றது.
அதே சமயம் இக்கிராமத்தில் எவ்வித கொள்ளைச் சம்பவங்களும் இதுவரை இடம்பெறப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 300 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற ஒரு சம்பவம் காரணமாகவே அவர்கள் இவ்வாறு கதவுகள் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது கடந்த ”300 ஆண்டுகளுக்கு முன்னர் குறித்த கிராமத்தில் உள்ள பனஸ்னலா நதி பெருக்கெடுத்து வெள்ளமாக ஓடியதாகவும், அப்போது அதில் கருங்கல் ஒன்று தென்பட்டதாகவும், அன்றைய இரவே ஊர்த்தலைவரின் கனவில் சனி பகவான் தோன்றி ”அக்கருங்கல் தான் என் சிலை. அதை வைத்து வழிபடுங்கள். நான் உங்கள் ஊரை காப்பாற்றுகிறேன். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை, என்னை கூரை வைத்த கோவிலில் வைக்க கூடாது. கதவுகள் வைத்து என்னை அடைக்க கூடாது. விசாலமாக திறந்து வையுங்கள். உங்களின் பாதுகாப்பை நான் பார்த்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது.
அன்றில் இருந்தே குறித்த கிராமத்து மக்களும் தங்கள் வீடுகளில் இருந்த கதவுகளை நீக்கிவிட்டனர் எனக் கூறப்படுகின்றது.
மேலும் குறித்த கிராமத்தில் யுனைடெட் கமர்ஷியல் வங்கி 2011 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் "பூட்டு இல்லாத" கிளையைத் திறந்ததாகவும்,அக் கிராம மக்களின் நம்பிக்கைகளை மதித்து, அதே நேரம் பாதுகாப்பிற்காக ஒரு கண்ணுக்குத் தெரியாத ரிமோட் கண்ட்ரோல் மின்காந்த பூட்டையும் நிறுவியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது கடந்த 2015 ஆம் ஆண்டுதான், அங்கு முதல் முறையாக பொலிஸ் நிலையமொன்று நிறுவப்பட்டுள்ளதாகவும் ஆனால் இது வரை அங்கு ஒரு குற்ற நிகழ்வு கூட பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
34 minute ago
2 hours ago
2 hours ago