Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 நவம்பர் 17 , பி.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
அர்ஜென்டினாவைச் சேர்ந்த பெண் ஒருவர், சிகிச்சை அல்லது எந்த வித மருந்தையும் எடுத்துக் கொள்ளாமல் HIV தொற்றிலிருந்து தன்னைத் தானே குணப்படுத்தியுள்ளார்.
உலகளவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள இரண்டாவது சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
நோயாளியின் நோயெதிர்ப்பு மண்டலம் HIV வைரஸை அழித்ததாக வைத்தியர்கள் நம்புகிறார்கள்.
அவருடைய ஒரு பில்லியனுக்கும் அதிகமான செல்கள் சோதிக்கப்பட்ட போது, HIV நோய்த்தொற்றின் தடயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என 'இன்டர்னல் மெடிசின்' என்கிற சஞ்சிகையின் பதிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த செயல்முறையை கட்டுப்பாடுகளோடு பயன்படுத்த முடிந்தால், அது HIV வைரஸை துடைத்தொழிக்க அல்லது திறம்பட நோயைக் கையாண்டு குணப்படுத்த ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடும் என வைத்திய நிபுணர்கள் கூறுகின்றனர்.
HIV வைரஸை எதிர்கொள்ளும் இயற்கையான திறனோடு ஒரு சிலர் பிறக்கிறார்கள் என்பதற்கு இந்தக் கண்டுபிடிப்புகள் ஒரு சான்று. சிலருக்கு தொற்றுநோயைத் தடுக்கும் மரபணுக்கள் உள்ளன.
சிலருக்கு வைரஸ் தொற்று ஏற்படுகிறது. ஆனால், அந்த வைரஸை அவர்களது உடலே அழித்துவிடுகிறது.
பொதுவாக வைரஸை வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு வாழ்நாள் முழுவதும் ஆன்டிரெட்ரோ வைரல் சிகிச்சை (ART) தேவைப்படுகிறது.
அவர்கள் மருந்துகளை உட்கொள்வதை நிறுத்தினால், வைரஸ் மீண்டும் செயல்படத் தொடங்கி மீண்டும் பிரச்சினை ஏற்படும்.
சமீபத்திய ஆண்டுகளில், வைரஸை கட்டுப்படுத்தக் கூடிய "எலீட் கன்ட்ரோலர்கள்" பற்றிய அறிக்கைகள் உள்ளன.
லண்டனைச் சேர்ந்த ஆடம் கெஸ்டில்லெஜோவுக்கு புற்று நோய் இருந்தது. அவர் புற்றுநோய்க்காக ஸ்டெம் செல் சிகிச்சை எடுத்துக் கொண்ட பின், HIVக்கான மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்த முடிந்தது.
புற்றுநோய்க்கான சிகிச்சையின் போது HIVஆல் பாதிக்கப்பட்ட செல்கள் முழுமையாக அழித்தொழிக்கப்பட்டன.
அதிர்ஷ்டவசமாக அவருக்கு ஸ்டெம் செல் கொடுத்த நன்கொடையாளர் HIVவைரஸ் உடலில் நுழைவதையும், பாதித்த செல்களை அழிக்கும் உயிரணுக்களைக் கொண்ட, மொத்த உலக மக்கள் தொகையில் ஒரு சதவீத மக்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ உலகில் 'எஸ்பெரென்சா நோயாளி' என ஒரு சொல் இருக்கிறது. இவர்களுக்கு இயற்கையாகவே HIV வைரஸைக் கட்டுப்படுத்தும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இவர்களுக்கு ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சை தேவை இல்லை.
எஸ்பெரான்சா நோயாளிக்கு எட்டு ஆண்டுகளுக்கு மேலாக கண்டறியக்கூடிய HIVவைரஸ் இல்லை.
சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த லோரீன் வில்லன்பெர்க் என்பவரும் HIVஆல் பாதிக்கப்பட்டு, அவரது உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு மூலமே குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
4 hours ago