2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

முல்லைத்தீவிலும் பணிப்புறக்கணிப்பு

Niroshini   / 2021 செப்டெம்பர் 27 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை தாதியர்கள் மற்றும் முல்லைத்தீவு பிரதேச வைத்தியாசலை சிற்றூழியர்கள் ஆகியோர்களால், இன்று (27) காலை பணிபுறக்கணிப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான இந்தப் பணிப்புறக்கணிப்புப் போராட்டம், பிற்பகல் 1 மணிவரை முன்னெடுக்கப்படும்.

நாடளாவிய ரீதியில் தாதியர் சங்கத்தினர், பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு வரும் நிலையில், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், முல்லைத்தீவிலும் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.

இதனால், நோயாளர்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளர்கள். பிற்பகல் 1 மணிக்கு பின்னரே சிகிச்சை நடைபெறும் என அறிவித்துள்ளதாக நோயாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X