2022 ஜனவரி 21, வெள்ளிக்கிழமை

வர்த்தகர்களுக்கு இராணுவம், புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல்

Freelancer   / 2021 நவம்பர் 27 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

மாவீரர் நாளான இன்றைய தினம் உயிர்நீத்த தமது உற்றார், உறவினர் நண்பர்களை நினைவில் கொண்டு தமிழர் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் நினைவேந்தல் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் இன்று காலை முதல் முல்லைத்தீவு நகர வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மூடப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களை திறக்குமாறு இராணுவத்தினர் மற்றும் இராணுவ புலனாய்வாளர்கள் வர்த்தக நிலைய பெயர் பலகையில் காணப்படும் வர்த்தக  நிலைய  உரிமையாளர்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இராணுவத்தினரின், புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் காரணமாக சில வர்த்தகர்கள் வர்த்தக நிலையங்களை திறந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவு நகரத்தில் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் ஒவ்வொரு சந்திகள் கடைகள், கடற்கரை பகுதிகளில் ஆயுதம் ஏந்திய நிலையில் நிறுத்தப்பட்டுள்ளார்கள். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X