2022 ஜனவரி 23, ஞாயிற்றுக்கிழமை

இரணைமடுக்குளம் திறக்கப்பட்டது

Niroshini   / 2021 ஒக்டோபர் 20 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

பெரும்போக நெற்செய்கையின் நீர்ப்பாசனத்துக்காக, கிளிநொச்சி - இரணைமடுக்குளம், நேற்று  (19) திறக்கப்பட்டது.

இரணைமடுக் குளத்தின் கீழ், இம்முறை, 21,000 ஏக்கருக்கு மேற்பட்ட  நிலப்பரப்பில், காலபோக நெற்செய்கையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், நெற்பயிருக்கான நீர் விநியோகத்துக்காக இரணைமடுக்குளத்தை, கிளிநொச்சி மாவட்டப் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் த.இராஜகோபு திறந்து வைத்தார்.

குளத்தின் நீரை வீண் விரயமாக்காமல், சிறந்த முறையில் பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்துமாறு, கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X