2021 ஜூலை 28, புதன்கிழமை

’திருப்பலியில் கலந்துகொள்பவர்களின் பெயர்களை சமர்ப்பிக்கவும்’

Niroshini   / 2021 ஜூன் 17 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மருதமடு அன்னை ஆடி திருவிழா திருப்பலியில் கலந்துகொள்;பவர்களின் பெயர் விவரங்கள் முன்கூட்டியே தமக்கு சமர்ப்பிக்கப்பட வேண்மென, மன்னார் மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில், இன்று (17) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், மன்னாரில் ஆடைத்தொழிற்சாலையில் கடமைற்றுகின்ற 10 பேர் உள்ளிட்ட  15 பேருக்கு, கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மன்னார் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள துரித செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், மருதமடு அன்னை ஆடி திருவிழா திருப்பலியில் கலந்துகொள்ள 30 நபர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவித்த அவர், கலந்துகொள்பவர்களின் பெயர் விவரங்கள் முன்கூட்டியே தமக்கு சமர்ப்பிக்கப்பட வேண்மெனவும் கூறினார்.

அபாயம் கூடிய பகுதிகளில் இருந்து திருவிழா திருப்பலிகளில் கலந்துகொள்ள வருகின்றவர்களுக்கு அன்ரிஜன் பரிசோதனைகளை மேற்கொள்வோமெனவும், ரி.வினோதன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .