Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Niroshini / 2021 ஜூன் 20 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
'இலுப்பைக்கடவை கடற்றொழிலாளர்கள் மத்தியில் காணப்படும் தொழில்சார் முரண்பாடுகளுக்கு, சுமூகமான தீர்வு பெற்றுத்தரப்படும்' என்று, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.
மன்னார் - இலுப்பைக்கடவை பகுதிக்கு, நேற்று (19) விஜயமொன்றை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதேச கடற்றொழிலாளர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே, அவர் இவ்வாறு உறுதியளித்தார்.
இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், இலுப்பைக்கடவை கிராமத்தில், கடலட்டைப் பண்ணை அமைத்தல், நண்டு வளர்த்தல் போன்ற திட்டங்கள் தொடர்பாக, மக்கள் மத்தியில் இருவேறான கருத்துகள் காணப்படுகின்றன. என்றார்.
குறிப்பாக, மக்கள் பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைவதை விரும்பாத சில சுயலாபசக்திகள், இலுப்பபைக்கடவை மக்களில் ஒரு பகுதியினருக்கு, கடலட்டை உற்பத்தி தொடர்பான தவறான புரிதல் ஏற்படுத்தியிருப்பதாவும், அவர் தெரிவித்தார்.
எனவே, குறுகிய நோக்கங்களுக்காக மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த முரண்பாடு சுமூகமாக தீர்க்கப்பட்டு, குறித்த கிராம மக்கள், யாருடைய ஒத்துழைப்புகளையும் எதிர்பார்க்காமல் வாழக்கூடிய வாழ்வாதாரமும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும், டக்ளஸ் உறுதியளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .