2022 ஜனவரி 23, ஞாயிற்றுக்கிழமை

ஆளுந்தரப்பால் பாதீடு தோற்கடிப்பு

Niroshini   / 2021 நவம்பர் 23 , பி.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

பூநகரி பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம், ஆளும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினாலேயே தோற்கடிக்கப்பட்டுள்ளது. 

  வரவு - செலவுத் திட்டத்துடனான பிரதேச சபை அமர்வு, பூநகரி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் ஐயம்பிள்ளை தலைமையில், இன்று (23) காலை 10 மணிக்கு, ஆரம்பமானது. இதன்போது, 2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் சபை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
இதன்போது, ஆதரவாக 8 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும், குறித்த வரவு - செலவுத் திட்டத்துக்கு கிடைத்திருந்தது

அதாவது, 11 பேர் கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர்களில் 10 பேரும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஒருவரும் எதிராக வாக்களித்தனர். 

தவிசாளர் மற்றும் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் இருவரும், ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஒருவரும், சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் நால்வரும், ஈபிடிபி கட்சி உறுப்பினர் ஒருவரும் ஆதரவாக வாக்களித்தனர்.

இதனால் குறித்த வரவு - செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய கூட்மைப்பினர், அனைத்து வட்டாரங்களிலும் வெற்றி பெற்று 11 ஆசனங்களுடன் ஆட்சி அமைத்தனர். தவிசாளரை பதவி விலகுமாறு பல தடவைகள் ஆளும் தரப்பினரால் கோரிக்கை விடப்பட்ட நிலையில், நேற்றைய தினம், குறித்த வரவு - செலவுத் திட்டம் ஆளும் தரப்பினராலேயே தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X