2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

’சாரதிகளுக்கு விடுதி இல்லை'

Niroshini   / 2021 ஜூன் 17 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில், சாரதிகளுக்கான விடுதி அமைக்கப்படவில்லை என, கரைதுறைபற்று பிரதேச சபை உறுப்பினர் த.அமலன் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில், நான்கு நிரந்தர சாரதிகள் உள்ளனரென்றும் இவர்களுக்கான விடுதி அமைக்கப்பட வேண்டும் என கடந்த பல வருடங்களாக வடமாகாண சுகாதார அமைச்சுக்கு வைத்தியசாலையின் நிர்வாகத்தால் கோரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட்டன எனவும் கூறினார்.

இவ்வாண்டும் அனுப்பப்பட்ட கோரிக்கை கடிதம், நிராகரிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்த அவர், சாரதிகள் நித்திரை விழித்து அவசர நோயாளர்களை பல்வேறு வைத்தியசாலைகளுக்கு கொண்டு சென்று, சிகிச்சைக்காக அனுமதித்து விட்டு மாவட்ட பொது வைத்தியசாலைக்குத் திரும்பினால், ஓய்வு எடுப்பதற்கு விடுதி வசதிகள் இல்லை எனவும் கூறினார்.

'இதனால,; சாரதிகளுக்கான ஓய்வு விடுதி அமைக்கும் பணிகள் பல வருடங்களாக முன்னெடுக்கப்படாத நிலை காணப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பாக வடமாகாண ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும், அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .