2021 நவம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கொழும்புக்கு கஞ்சா கடத்தியவர்கள் விளக்கமறியலில்

Niroshini   / 2021 செப்டெம்பர் 27 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

6. செ. கீதாஞ்சன்

 

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு, கடந்த 24ஆம் திகதியன்று, காரில் கஞ்சா கடத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட மூவரை, ஒக்டோபர் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம், 25ஆம் திகதியன்று, உத்தரவு பிறப்பித்துள்ளது.

புத்தளத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் நெச்சிகாம பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் ஒருவரும் யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாங்குளம் பகுதியில் வைத்து குறித்த காரை சோதனை செய்த போது, 6 கிலோ கிராம் கஞ்சாவுடன் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உள்ளிட்ட மூவரை, பொலிஸார் கைதுசெய்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .