2022 ஜனவரி 22, சனிக்கிழமை

ஆசிரியர்கள் வராவிடின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் களமிறங்குவர்

Niroshini   / 2021 ஒக்டோபர் 18 , பி.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில், வரும் 21ஆம் திகதியன்று, பாடசாலைகள் திறக்கப்படவுள்ள நிலையில், அன்றைய தினம் ஆசிரியர்கள் வராவிடின், அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பணியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில், பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடலில் வைத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 
"விளையாட்டு, கலை பாடங்களை புகட்டக் கூடிய திறமை வாய்ந்த உத்தியோகத்தர்கள் பிரதேச செயலகங்களில் உள்ளனர்.

"நீண்ட நாள்கள் இடைவெளியின் பின்னர் பாடசாலைக்கு திரும்பும் மாணவர்களை அன்புடன் வரவேற்க வேண்டும். அன்று, ஆசிரியர்கள் சமூகமளக்காவிடின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பயன்படுத்தி அவர்களுக்கான விளையாட்டு, கலை பாடங்களை கற்பிக்க முடியும்.

"அனைத்து பிரதேச செயலாளர்களும் பாடசாலை நடவடிக்கைகளை கண்காணித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வர்" என, இந்தக் கலந்துரையாடலின் போது, மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X