2022 ஜனவரி 23, ஞாயிற்றுக்கிழமை

செங்குந்தா பொதுச்சந்தை வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

Niroshini   / 2021 ஒக்டோபர் 18 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

யாழ்ப்பாண மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட கல்வியங்காடு, செங்குந்தா பொதுச்சந்தை மரக்கறி வியாபாரிகள், இன்று (18), கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.

செங்குந்தா சந்தைக்கு  அண்மையான பகுதிகளில் உள்ள வீதிகளில், மரக்கறி வியாபாரம் மேற்கொள்ளப்படுவதால், சந்தையில் வியாபாரம் நடைபெறுவது இல்லை எனவும் தெரிவித்தே, செங்குந்தா பொதுச்சந்தை மரக்கறி வியாபாரிகள், கதவடைப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

 

கடந்த ஒரு வருடமாக இவ்வாறான நிலை காணப்படுவதாகவும் யாழ்ப்பாண மாநகரசபை மற்றும் நல்லூர் பிரதேச சபையினரிடம் சந்தைக்கு அண்மையில்  வீதிகளில் கடைகளில் வியாபாரத்தில் ஈடுபடுவோரை தடுத்து நிறுத்துமாறு ஏற்கெனவே கோரிக்கை விடுத்த போதிலும், அதற்குரிய நடவடிக்கை எடுக்காததன் காரணமாகவே, வியாபாரிகள் அனைவரும் தமது வியாபார நடவடிக்கைகளை இடைநிறுத்தி கடையடைப்பில் ஈடுபட்டுள்ளதாக, செங்குந்தா பொதுச்சந்தை மரக்கறி வியாபாரிகள் தெரிவித்தனர்.

தமக்குரிய தீர்வு வழங்கும் வரை குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும், வியாபாரிகள் தெரிவித்துள்ளார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X