2023 செப்டெம்பர் 26, செவ்வாய்க்கிழமை

வெள்ளைவான் புரளி: வாகனத்தின் மீது தாக்குதல்; மூவர் காயம்

Editorial   / 2023 மே 17 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சியில், வெள்ளைவான் புரளியால்  வாகனம் ஒன்று அடித்து நொறுக்கப்பட்டதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.  

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாரதிபுரம் வை எம் சி ஏ வீதியில் பொருட்கள் விற்பனை செய்வதற்காக சென்ற வாகனமே பொதுமக்களால் இவ்வாறு செவ்வாய்க்கிழமை (16) மாலை மடக்கி பிடிக்கப்பட்டது.

அந்த வாகனத்தில் பயணித்த மூவரையும் கிராம அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைந்துள்ளனர்.   

அந்த மூவரும் தமிழ் மொழியில் பேசாமையால் பிரதேச மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து  கிராம அமைப்புக்களைச் சேர்ந்தவர்களை அழைத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், அம்மூவரிடமும் விசாரணைகளை மேற்கொண்டபோது, வியாபாரம் செய்ய வந்திருந்த நிலையிலேயே பிரதேசவாசிகள் இவ்வாறு மடக்கிப்பிடித்து தடுத்துவைத்துள்ளனர் என பொலிஸாரிடம் அம்மூவரும் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X