2022 ஜனவரி 23, ஞாயிற்றுக்கிழமை

மன்னாரில் டைனமோட் வெடிபொருள்கள் மீட்பு

Niroshini   / 2021 நவம்பர் 21 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட் 

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை டைனமோட் வெடிபொருள்கள், நேற்று (20) மாலை, மன்னார் - சாந்திபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பொலிஸார் மீட்டுள்ளதோடு, சந்தேகநபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடற்படையினரின் இரகசிய தகவலை தொடர்ந்து, மன்னார் பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் தலைமையில் சென்ற பொலிஸ்  குழுவினர், 998 கிலோகிராம் எடையுள்ள குறித்த டைனமோட் வெடிபொருள்களை கைப்பற்றியுள்ளனர்.

 இந்த வெடிபொருள் மீன்பிடிக்க   பாவிக்கப்படும் வெடிபொருள் என தெரிவிக்கப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்டோர், சாந்திபுரம் மற்றும் வங்காலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X