2022 ஜூலை 04, திங்கட்கிழமை

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதற்றம்

Freelancer   / 2022 மே 13 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை முழுவதும் நேற்று ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், மன்னார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில், எரிபொருளை நிரப்புவதற்கு திடீரென மக்கள் கூடியமையால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

நேற்று (12) மாலை ஊரடங்கு காலப்பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அவசர சேவைகளுக்கு என எரிபொருள் விநியோகம் இடம் பெற்ற நிலையில், காலை முழுவதும் காத்திருந்து எரிபொருள் கிடைக்காதவர்கள் மாலை நேரம் எரிபொருள் பெற முயன்ற நிலையில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் மற்றும் பொது மக்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

சாதாரண நேரங்களில் எரிபொருள் நிரப்ப சென்றால் எரிபொருள் இல்லை என ஊழியர்கள் தெரிவிப்பதாகவும், நள்ளிரவு நேரங்களில் சில தனியார்களுக்கு அதிக விலையிலும் அதிக அளவிலும் எரிபொருட்களை வழங்குவதாகவும் கூறி மக்கள் முரண்பட்டனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் பொது மக்களுடன் கலந்துரையாடி, மக்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்த நிலையில் எரிபொருள் நிரப்ப வருகை தந்த அனைவரும் கலைந்து சென்றனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .