2021 நவம்பர் 30, செவ்வாய்க்கிழமை

விபத்தால் ஓமந்தை பகுதிக்கான மின்சாரம் தடை

Niroshini   / 2021 ஒக்டோபர் 13 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - ஏ 9 வீதி, மாணிக்கவளவு சந்திப் பகுதியில், இன்று (13) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற விபத்தால், ஓமந்தை பகுதிக்கான மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கன்டர் ரக வாகனம் ஒன்று, மின் கம்பமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. 

இதன் போது சாரதிக்கு சிறு காயம் ஏற்பட்டதுடன், வாகனமும் சேதமடைந்தது. 

இந்த விபத்தால் மின் கம்பம் உடைந்து வீழ்ந்ததில், ஓமந்தை பகுதியில் உள்ள சில கிராமங்களுக்கான மின்சாரம் 3 மணியில் இருந்து தடைப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .