2022 ஜனவரி 22, சனிக்கிழமை

சட்டவிரோத தொழில் நடவடிக்கை: மூவர் கைது

Niroshini   / 2021 நவம்பர் 24 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ. கீதாஞ்சன்

முல்லைத்தீவு - கொக்குளாய் கடற்பகுதியில், நேற்று (23), சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட இருவர் மற்றும் அதே பகுதியில் சட்டவிரோத மதுபானம் தயாரித்த ஒருவர் என மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 இதன் போது, மீனவப் படகு ஒன்றும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த இரு மீனவர்களே,இவ்வாறு கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு, முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அத்துடன், வெடிமருந்து பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்கள் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தால் எடுக்கப்பட்டு, ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டு உள்ளதுடன்,  இவர்கள் மீதான சட்ட நடவடிக்கையை முன்னெடுக்கும் நடவடிக்கையில் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் ஈடுபட்டுள்ளது.

இதேவேளை, கொக்குளாய் பகுதியில், சட்டவிரோதமான முறையில் மதுபான தயாரிப்பு இடம் ஒன்று சிறப்பு அதிரடிப்படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், கொக்குளாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர்  கைதுசெய்யப்பட்டடார்.

இதன்போது, சட்டவிரோத மதுபானம் தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களும் 256 லீற்றர் கசிப்பும் 360 லீற்றர் கோடாவும் மீட்கப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட நபரையும் சான்று பொருள்களையும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில், கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X