2022 ஜனவரி 22, சனிக்கிழமை

விபத்தில் இருவர் படுகாயம்

Niroshini   / 2021 நவம்பர் 21 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
 

கிளிநொச்சி - டிப்போ சந்தியில், இன்று (21) நண்பகல் 12 மணியளவில் நடைபெற்ற விபத்தில், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பரந்தன் திசையில் இருந்து கிளிநொச்சி நகருக்குள் நுழைந்த கன்டர் வாகனம், கட்டுப்பாட்டை இழந்து, பஸ் நிலையத்தில் தரித்திருந்த ஓட்டோ மற்றும் காருடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது,  மோதிய கன்டர் வாகனம் பகுதியளவில் சேதமடைந்ததுடன், ஓட்டோ மற்றும் கார் ஆகியனவும் சேதமடைந்துள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X