Freelancer / 2023 ஜனவரி 26 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உரிய வாழ்விட வசதிகளின்றி, ஆயிரத்தும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த பல ஆண்டுகளாக, தற்காலிக கொட்டகைகளில் வாழ்ந்து வருகின்றன.
தொடர் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு, மீள்குடியேறி வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு, 2018, 2019 ஆம் ஆண்டுகளில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டன.
ஆனால், எந்த வீட்டுக்கும் முழுமையான நிதி வழங்கப்படாது, முதல் கட்டம், இரண்டாம் கட்டம் என, பகுதிக் கொடுப்பனவுகள் மாத்திரமே வழங்கப்பட்டன. ஆனால், இந்த வீட்டுத் திட்டங்களை குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவுறுத்த வேண்டும் என்ற அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக, அந்த வீடுகளை அமைப்பதில் பெரும் சவால்களை அந்தக் குடும்பங்கள் சந்தித்தன.
குறிப்பாக, குறிப்பிட்ட காலத்துக்குள் வீட்டுத் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்ற காரணத்துக்காக தங்களிடமிருந்த நகைகள், பொருட்களை விற்றும், வங்கிகளில் கடன் பெற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக நுண்நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன்களைப் பெற்றும் வீடுகளைக் கட்டினார்கள். ஆனால், இந்த வீடுகளுக்கு முதற்கட்ட கொடுப்பனவு, இரண்டாம் கட்ட கொடுப்பனவு என்பன மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. ஏனைய கொடுப்பணவுகள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்
கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய நான்கு மாவட்டங்களிலும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் வழங்கப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கான முழுமையான நிதி வழங்கப்படாத நிலையில், 11ஆயிரத்து 829குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

1 hours ago
4 hours ago
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
02 Nov 2025
02 Nov 2025