2022 ஜனவரி 23, ஞாயிற்றுக்கிழமை

முன்னாள் அரசியல் கைதிக்கு அழைப்பு

Niroshini   / 2021 நவம்பர் 29 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-. அகரன்

வவுனியாவில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதி ஒருவரை, பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு, பயங்கரவாத விசாரணை பிரிவினரால், (டி.ஐ.டி) இன்று (29) அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா - தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதியான செல்வநாயகம் ஆனந்தவர்ணன் என்பவருக்கே, இவ்வாறு அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 1ஆம்  திகதி, கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு சமூகமளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பாணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

"பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாக, வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக, விசாரணையை மேற்கொள்வதற்கு 2021ஆம் ஆண்டு 12ஆம் மாதம் 01ஆம் திகதி காலை 9.30 மணிக்கு, பயங்கரவாத விசாரணை மற்றும் தடுப்பு பிரிவு, கெப்பிட்டல் கட்டிடம், நாரன்பிட்ட முகவரியில் அமைந்துள்ள 3ஆம் மாடிக்கு  சமூகமளிக்குமாறு அழைக்கின்றோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X