2021 ஜூலை 28, புதன்கிழமை

முள்ளியவளையில் நால்வர் கைது

Freelancer   / 2021 ஜூன் 12 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முள்ளியவளை - வற்றாப்பளை வீதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறி வீதியில் பயணித்த புதுக்குடியிருப்பினை சேர்ந்த இருவர் உள்ளிட்ட நால்வர் முள்ளியவளை பொலிஸாரால் இன்று (12) நண்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

பயணத்தடை காலத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறிய குற்றச்சாட்டில் இவர்கள் மீது வழக்குத்தொடரப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பில் இருந்து வற்றாப்பளை சென்ற புதுக்குடியிருப்பினை சேர்ந்த இருவர் மற்றும் வற்றாப்பளையினை சேர்ந்த இருவர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டு முள்ளியவளை பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்படவுள்ளதாக முள்ளியவளை பொலிசார் தெரிவித்துள்ளார்கள். - R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .