2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

’இன்னும் காத்திருந்தால் அதிகாரத்தை இழக்க நேரிடும்’

Niroshini   / 2021 செப்டெம்பர் 28 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

பாதிக்கப்பட்ட தமிழர்களின் பேச்சை, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் கேட்க வேண்டுமென, தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க செயலாளர்  கோபாலகிருஷ்ணன் ராஜ்குமார் தெரிவித்தார்.

மேலும், 'நாம் இன்னும் 2 ஆண்டுகள் காத்திருந்தால், வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தை இழக்க நேரிடும்' எனவும், அவர் கூறினார்.

வவுனியாவில், 1,685ஆவது நாளாக ஒரு நாளைக்கு ஒரு நேர உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம்  ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்த்து கருத்து தெரிவித்த அவர், ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் இங்கு இருக்கும்போது, தமிழர்களின் பேச்சைக் கேட்க வேண்டுமென்றார்.

காணாமல் ஆக்கப்படட  குழந்தைகள் உட்பட அரசியல் தீர்வு மட்டுமே தீவின் முழுப் பிரச்சினையையும் தீர்க்கும் என்று தாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திடம் தொடர்ந்து சொல்ல விரும்புவதாகவும், அவர் கூறினார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதில் மட்டும் ஐரோப்பிய ஒன்றியம் கவனம் செலுத்தக்கூடாது எனத் தெரிவித்த அவர், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை நன்கொடையாளர் இணைத் தலைவர்கள் விடுதலைப் புலிகளின் அழிவுக்கு  ஒரு பகுதியாக இருந்ததை தாங்கள் அறிவதாகவும் இது இலங்கையில் சிங்களவர்களுக்கான ஓர் உதவி எனவும் கூறினார்.

போரின் போது, இலங்கை நன்கொடையாளர் இணைத் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற இலங்கை தவறிவிட்டது எனத் தெரிவித்த அவர், ஐரோப்பிய ஒன்றியம் என்பது இலங்கை நன்கொடையாளர் இணைத் தலைவர்களின் ஒரு பகுதியாகும் எனவும் கூறினார்.

'சிங்கள இராணுவம், காவல்துறை மற்றும் சிங்கள அரசியல்வாதிகளிடமிருந்து ஆக்கிரமிப்பு மற்றும் ஒடுக்குமுறையில் இருந்து தமிழர்களைப் பாதுகாக்க ஓர் அரசியல் தீர்வு தேவை.

பொழுது சாயுதே, நாம் இன்னும் 2 ஆண்டுகள் காத்திருந்தால், வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தை இழக்க நேரிடும். வடக்கு மற்றும் கிழக்கில் சிங்களவர்களை குடியேற்றி இலங்கை அரசின் வேகம் கூடிக்கொண்டே போகிறது.

'இலங்கை நன்கொடையாளர் இணைத் தலைவர்களுக்கு இலங்கை அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான தார்மீகப் பொறுப்பை ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுள்ளது: எனவும், அவர் தெரிவித்தார்.

தமிழ் அரசியல்வாதிகளை நாங்கள் நம்பவில்லை எனத் தெரிவித்த அவர், 'அவர்கள் குரல் எழுப்பப் பயப்படுவதாகத் தெரிகிறது மேலும் இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்படும் சலுகைகளையும் அவர்கள் அனுபவிக்கிறார்கள்' எனவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .