2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

ரவிகரன், சிவாஜிலிங்கம் மீதான வழக்கு விசாரணை பெப்ரவரிக்கு ஒத்திவைப்பு

Niroshini   / 2021 ஒக்டோபர் 13 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன், விஜயரத்தினம் சரவணன்

 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில், மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியை அபகரிக்கச் சென்ற நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோட்டாபய கடற்படை முகாமுக்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக,  வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணை, பெப்ரவரி மாதம் 08ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா அசாதாரண சூழ்நிலை காரணமாக, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தால், குறித்த வழக்கு விசாரணைகள் எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணைகள், கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .