2021 டிசெம்பர் 03, வெள்ளிக்கிழமை

தாதியர் சங்கத்தினர் போராட்டத்துக்கு முல்லைத்தீவில் ஆதரவு

Niroshini   / 2021 செப்டெம்பர் 22 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

நாடளாவிய ரீதியில், தாதியர் சங்கத்தினர், 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (22) முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, முல்லைத்தீவு மாவட்ட தாதியர் மருத்துவ சங்கத்தினரும், அரை மணிநேர பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு, கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா காலத்தில் தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல்ஈ இந்தக் காலத்தில் மேலதிக நேர விசேட தின கொடுப்பனவை கட்டுப்பாடு இன்றி வழங்குதல், சுகாதார ஊழியர்களின் வெற்றிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, இந்தப் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில், மீண்டும் 27ஆம் திகதியன்று, 5 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X