2021 நவம்பர் 30, செவ்வாய்க்கிழமை

திடீரென தீப்பற்றி கருகிய வாகனம்

Niroshini   / 2021 ஒக்டோபர் 13 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் - அரிப்பு பகுதியில்,  நேற்று (12)  இரவு வவுனியா நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் ஒன்று,  திடீரென தீப்பற்றி எறிந்துள்ளது.

இதன் காரணமாக, குறித்த பட்டா ரக வாகனம் முழுமையாக எரிந்துள்ளதோடு, அதில் இருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருள்களும் எரிந்து நாசமாகியுள்ளன.

நேற்று  (12) மாலை, வவுனியாவில் இருந்து மன்னார் - அரிப்பு பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு பொருள்களை வழங்கி விட்டு, மீண்டும் வவுனியா நோக்கி பயணித்த போதே, குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எனினும், குறித்த வாகனத்தில் பயணித்த இருவர் எவ்வித காயங்களும் இன்றி தப்பியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை, சிலாபத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .