Niroshini / 2021 நவம்பர் 29 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
வீட்டில் உறவினர்கள் இல்லாத சமயத்தில், 12 வயது மதிக்கத்தக்க மகளிடம் சேட்டை புரிந்தவரின் காது அறுக்கப்பட்ட சம்பவம் ஒன்று, கிளிநொச்சி - தருமபுரம் பகுதியில், நேற்று (28) இடம்பெற்றுள்ளது.
அத்துடன், அவரது கை மற்றும் கால் போன்ற இடங்களில் பலமாக வெட்டப்பட்ட நிலையில் தருமபுரம் வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மேலதிக கிளிநொச்சி வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை, தருமபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன், வெட்டப்பட்ட வாளையும் மீட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .