2023 ஏப்ரல் 01, சனிக்கிழமை

‘கறுப்பு ஜனவரி’ அனுஷ்டிப்பு

Freelancer   / 2023 ஜனவரி 26 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம்  தவசீலன்

ஜனவரி மாதம், இலங்கையில்  ஊடகத்துறையைப் பொறுத்த வரையில் கறைபடிந்த மாதமாகவே காணப்படுகிறது. பல்வேறு ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள், ஊடகவியலாளர்கள் கொலை, ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை என்பவற்றுக்கு நீதி கோரி, வருடம் தோறும் ஜனவரி மாதத்தை ‘கறுப்பு ஜனவரி’யாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. 

அந்தவகையில், இவ்வருடமும் கறுப்பு ஜனவரியை அனுஸ்டிக்கும் வகையில், 2006ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனுடைய 17ஆம் ஆண்டை நினைவு கூரும் முகமாகவும் 2010ஆம் ஆண்டு கடத்தப்பட்ட ஊடகவிலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் நினைவாகவும் முல்லைத்தீவு ஊடக அமையத்தினர், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு நகர்ப் பகுதிகளில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கையில் நேற்று முன்தினம் (24) ஈடுபட்டனர்.

இதேவேளை, முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனுடைய 17ஆம் ஆண்டு நினைவேந்தலும் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவினுடைய 14ஆம் ஆண்டு நினைவேந்தலும் 2010ஆம் ஆண்டு, கொழும்பில் வைத்து கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு 13 ஆண்டு நினைவு நிகழ்வும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .