Niroshini / 2021 ஜூன் 20 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்\
முல்லைத்தீவு - விசுவமடு பகுதியில், நீண்ட நாள்களாக, வீடுகளுக்குள் புகுந்து, நீர் இறைக்கும் இயந்திரம் உள்ளிட்ட பெறுமதியான பொருள்களைத் திருடிவந்த கொள்ளையர்கள் நால்வர், நேற்று (19), கிராம வாசிகளால் மடக்கி பிடிக்கப்பட்டு, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள், 17,18 வயதுகளையுடையவர்கள் எனவும் இவர்கள், விசுவமடு குமாரசாமிபுரம், வள்ளுவர்புரம், மாணிக்கபுரம், இளங்கோபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களெனவும், பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவர்கள் நால்வரும், விசுவமடு மேற்கு பகுதியில் உள்ள வீடொன்றில், நேற்று (19) அதிகாலை, திருட முற்பட்ட போதே, கிராம மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளனர்.
குறித் சிறுவர்கள், மேலும் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களென, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களை, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
11 minute ago
14 minute ago
19 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
14 minute ago
19 minute ago
23 minute ago