2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

’தமிழ் மக்களின் மனங்களை வெல்லமுடியாது’

Niroshini   / 2021 செப்டெம்பர் 28 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ. கீதாஞ்சன்

இந்த அரசாங்கத்தால் தமிழ் மக்களின் மனங்களை எந்த காலத்திலும் வெல்லமுடியாது என்று, புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உப தவிசாளர் க.ஜெனமேஜயந் தெரிவித்தார்.

இன்று (28), பிரதேச சபை அமர்வில் இடம்பெற்ற கண்டன தீர்மானத்தின் போது, கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரைத்த அவர், ஐக்கிய நாடுகள் சபையில் நினைவேந்தலுக்குரிய உரிமை இருக்கின்றது எனவும் இறந்தவர்களுக்கு நினைவுக்கொள்ள உரிமை இருக்கின்றது எனவும் அதனை எவராலும் தடுக்க முடியாது எனவும் கூறினார்.

தங்கள் மண்ணில் நின்மதியாக நிதந்தரமாக இலட்சியப் பயணத்தோடு உயிரிழந்தவர்களின் ஆத்மாக்களுக்காக ஒரு நினைவஞ்சலியை செய்யமுடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது எனவும், அவர் கூறினார்.

'அஞ்சலி நிகழ்வை கொரோனாவை காரணம் காட்டுகின்றார்கள். அரசியல் கைதிகளை அச்சுறுத்தியவர் மட்டக்களப்பில் கூட்டத்தை அமைத்து மக்கள் அணியணியாக சென்றதை நாங்கள் அவதானிக்க முடிகின்றது.

'இது தமிழ் மக்களை அடக்கி ஒடுக்குகின்ற செயற்பாடாக அவதானிக்க முடிகின்றது. சிங்கள அரசியல்வாதிகள் மக்களை கூட்டலாம் அங்கு கொரோனா வராது. ஆனால் நாங்கள் மூன்று பேர் சென்று ஒரு நிகழ்வினை செய்யும் போது, அங்கு கொரோனாவை காரணம் காட்டி எங்கள் உரிமைகளை நசுக்கும் செயற்பாட்டினை வன்மையாக கண்டிக்கின்றோம்' என்று தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .