2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

புதிய ஆளுநரின் முதல் விஜயம்

Niroshini   / 2021 ஒக்டோபர் 17 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட், என். ராஜ் 

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா,நேற்று (16) மதியம், மன்னார் திருக்கேதீஸ்வர கோவிலுக்கு விஜயம் செய்து,  பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டுள்ளார்.

கடந்த வாரம், ஜனாதிபதியால் வடக்கு மாகாண புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டதை அடுத்து, கொழும்பில் உள்ள வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் வைத்து, தனது கடமையை அவர் ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில், அவர் நேற்று (16), மன்னார் மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

மன்னார் திருக்கேதீஸ்வரம் கோவிலில் பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்ட அவர், திருக்கேதீஸ்வர கோவில் பாலாவி தீர்த்தக் கேணியில், குடத்தில் நீரெடுத்து சிவலிங்கப் பெருமானுக்கு நீர் ஊற்றி வழிபாடு மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .