Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Freelancer / 2023 ஏப்ரல் 01 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன்-
வட கிழக்கில் தமிழர்களின் இருப்பை அழிக்கும் திட்டமிட்ட செயற்பாடுகளைக் கண்டித்தும் அதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் மாபெரும் கண்டனப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தலைமையில்
யாழ்ப்பாணம் சங்கானைச் சந்தியில் இன்று காலை இப் போராட்டம் நடைபெற்றது.
இதன் போது வெடுக்குநாறி மலை எங்கள் சொத்து, கிண்ணியா எங்கள் சொத்து, நெடுந்தீவு எங்கள் சொத்து, கச்சதீவு எங்கள் சொத்து, அழிக்காதே அழிக்காதே தமிழினத்தை அழிக்காதே, தொல்லியல் திணைக்களமே வெளியேறு, வெளியேறு வெளியேறு படைகளே வெளியேறு, எங்கே எங்கே உறவுகள் எங்கே, தமிழர்களின் தீர்வு சுயாட்சியே, எடுப்பது பிச்சை அறுப்பது எங்களின் கழுத்தையா, நீக்கு நீக்கு பயங்கரவாத தடை சட்டத்தைநீக்கு, அரசியல் கைதிகளை விடுதலை செய்ய, வேணாலும் வேண்டும் சர்வதேச நீதி வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ல் தாங்கியவாறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப் போராட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 May 2025
11 May 2025
11 May 2025
11 May 2025