2022 ஜனவரி 21, வெள்ளிக்கிழமை

வான் கதவுகள் திறப்பு: ’மக்கள் விழிப்பாக இருக்கவும்’

Niroshini   / 2021 நவம்பர் 28 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக, முரசுமோட்டை, பன்னங்கண்டி, கண்டாவளை, வட்டக்கச்சி ஆகிய பகுதிகளின் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

 இரணைமடுக் குளத்தின் நான்கு வான் கதவுகள் இன்று (28) காலையில் திறக்கப்பட்டுள்ளன. 
 
தற்போது குளத்தில் இருந்து வெளியேறுகின்ற நீர் கனகராயன் ஆறு வழியாக கடலைச் சென்றடைகின்றது. இதன் காரணமாக, கனகராயன் ஆற்றுப் பக்கமாக தேவையற்ற முறையில் ஒருவரும் செல்ல வேண்டாம் எனவும்  குறிப்பாக சிறுவர்கள் புதினம் பார்ப்பதற்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கூடுதலான மழை வீழ்ச்சி பதிவாகி, இரணைமடுக் குளத்தின் ஏனைய வான் கதவுகளும் திறக்கப்படும் சந்தர்ப்பங்களில், தாழ் நிலப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் ஆண்டு தோறும் பாதுகாப்பான பகுதிகளை நோக்கி நகர்வது போன்று, கூடுதலான மழை வெள்ளம் வருகின்ற போது தற்காப்பு நிலையில் இருக்குமாறும், அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X