2022 ஜனவரி 21, வெள்ளிக்கிழமை

தடை உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு

Niroshini   / 2021 நவம்பர் 25 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

மாவீரர் தின நிகழ்வுகளுக்கு, கிளிநொச்சி நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருந்த தடை உத்நரவுக்கு எதிராக, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் மேல்முறையீட்டு நகர்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாளைய தினம் (26), குறித்த மேல்முறையீட்டு நகர்தல் பத்திரம் மீதான விசாரணை இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 19ஆம் திகதியன்று, கிளிநொச்சி நீதிமன்றத்தில், மாவீரர் தின நிகழ்வுகளுக்கு எதிராக கிளிநொச்சி பொலிஸாரால், 51 பேருக்கான தடையுத்தரவு பெறப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், விசுவமடு, முழங்காவில் ஆகிய பகுதிகளில் மாவீரர் துயிலுமில்லங்கள் காணப்படுவதுடன், உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்துக்கும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் பொலிஸாரால் தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது.

குறித்த துயிலுமில்லங்களில் கடந்த 2017, 2018ஆம் ஆண்டுகளில், மாவீரர்நாள் நினைவேந்தல்கள் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X