2022 மே 18, புதன்கிழமை

வலி. கிழக்கு பிரதேச சபைக்கு முன்னால் கவனயீர்ப்பு

Editorial   / 2022 ஜனவரி 10 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ்

வலி. கிழக்கு பிரதேச சபையின் செயலாளரை அச்சுறுத்தியவரைக் கைது செய்யுமாறு வலியுறுத்தின, பிரதேச சபை முன்றலில் இன்று (10) காலை முதல் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை, வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதில்  அமைக்கப்படுவது  குறித்து கிடைக்கப் பெற்ற  முறைப்பாடு தொடர்பில் பார்வையிட செயலாளர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்  அவ்விடத்துக்குச் சென்றுள்ளனர்.

அதன்போது முறைப்பாடுடன் தொடர்புடையவர், செயலாளரை அச்சுறுத்தி அவருடைய கையடக்கத் தொலைபேசியை பறித்துச் சென்றுள்ளார்.

அது தொடர்பில் அச்சுவேலி பொலிஸில் முறைப்பாடு பதியப்பட்டுள்ளது. எனினும், குறித்த நபர் வெளிநாட்டுப் பிரஜை எனவும் அவர் தற்போது நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாகவும் அவரை உடனடியாக கைது செய்யுமாறும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .